மீள்குடியேற்றத்தினை உறுதிப்படுத்தல் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கான
வசதிகளை வழங்கல்

மீள்குடியேற்ற அமைச்சின் நோக்கங்கள்


நிறுவனக்கட்டமைப்பு   பதிவிறக்க இங்​கே கிளிக் செய்யவும்
தொழிற்பாடுகள்:


கொள்கை:


மீள்குடியேற்றக்கொள்கையின் ஆக்கம் மற்றும் இற்றைப்படுத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து அவற்றினை நடைமுறைப்படுத்தல்.

 


நிர்வாக மற்றும் மனிதவள அபிவிருத்தி


 • பதவியணியினரின் தெரிவு, நியமனம் மற்றும் இளைப்பாற்றுகை.
 • பதவியணியினரின் அறிவுத்தறன், திறமையினை மேம்படுத்தல்.
 • பதவியனியினரின் செயற்திறன் மதிப்பீட்டறிக்கை.
 • பதவியனியினர் தொடர்பில் பூரணமான தரவுத்தளம் பேணல்.
 • ஒழுக்காற்று முகாமைத்துவம்.
 • முறைப்பாடுகளை முகாமைசெய்தல்
 • கூட்டுத்தொடர்பாடல் மற்றும் பொதுசனத் தொடர்புகளை நிர்வகித்தல்.

கணக்கிடுதல்/ நிதி மற்றும் கணக்காய்வு


 • பொதுக்கணக்குக்குழு மற்றும் பாராளுமன்ற பகிரங்க கணக்குக்குழு என்பவற்றிற்கான அறிக்கைகள் தயாரித்தல்.
 • வருடாந்த செலவுத்திட்ட மதிப்பீடு தயாரித்தல்.
 • வழங்கல்களையும் சேவைகளையும் பெற்றுக்கொடுத்தல்.
 • வருடாந்த செயற்திறன் அறிக்கை தயாரித்தல்.
 • பதவியணியினர் மற்றும் ஏனையோருக்கான சம்பளக் கொடுப்பனவினை மேற்கொள்ளல்.
 • அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் கணக்காய்வினை மேற்கொள்ளல்.
 • வருடாந்த நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல்.
 • மூலதனச் சொத்துக்களை முகாமைத்துவம் செய்தல்.
 • வரவுசெலவுத்திட்ட வழங்கல்களைக் கண்காணித்தல்.
 • அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட பொது நிதியினை முகாமைப்படுத்தல்.

திட்டமிடுதலும் அபிவிருத்தியும்


 • கூட்டுத்திட்டத்தினை தயாரித்தல்
 • வருடாந்த செயற்திட்டத்தினை தயாரித்தல்.
 • கூட்டு மற்றும் செயற்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றத்தினை மீள்பார்வை செய்தல்..
 • காலாண்டுக்கான முன்னேற்ற அறிக்கைகள் தயாரித்தல்..
 • வருடாந்த முன்னேற்ற அறிக்கை தாயாரித்தலும் பதிப்புச்செய்தலும்.
 • மீள்குடியேற்றம் மற்றும் அது தொடர்பான விடயங்களில் தகவல் தரவுத்தளத்தினை முகாமைத்துவம் செய்தல்.
 • உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தினை பொருத்தமான விதத்தில் கண்காணித்தல்.
 • பயனுறுதியான ICT அடிப்படையிலான தகவல் முறையினை விருத்திசெய்தலும் அமுலாக்கலும்.
 • அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தல். உள்ளக இடம்பெயர்ந்த / மீள்குடியேற்றப்பட்ட மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அறிக்கைகள் தயாரித்தல்.

ஒழுங்கமைப்பு


 • உரிய விதிகளை தயாரித்தல், திருத்துதல், இற்றைப்படுத்தல்
 • மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களில் கலந்தாலோசனை மற்றும் அறிவுரை வழங்குதல்
 

current events

வியாழக்கிழமை, 13 மார்ச் 2014 09:08

முரண்பாடுகளின் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணப் பிரதேசங்களிலுள்ள சமூக உள்ளகக் கட்டமைப்புக்களைப் புனரமைப்பதற்கான ஜப்பான் நாட்டின் உதவியுடனான கருத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன

kep-2வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமூக உள்ளகக் கட்டமைப்புக்களைப் புனர்நிர்மானம் செய்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தலும் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்குமான கருத்திட்டங்களின் இரண்டாம் கட்டத்திற்கான நிதி உதவியாக அண்ணளவாக 3.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணங்கியுள்ளது. இதற்கான பரிமாற்றக் குறிப்புக்களின் கைச்சாத்தானது ஜப்பானின் இலங்கைக்கான தூதர் திருவாளர் நொபுகிடோ ஹொபோ அவர்களின் UN HABITAT இன் பிரதான தொழில்நுட்ப ஆலோசகர் திருவாளர் டிம் மக்நைர் அவர்களுக்குமிடையில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் திரு. ஜனக சுகததாச அவர்களின் முன்னிலையில் 2014 மார்ச் 11ம் திகதி அன்று பி.ப. 03.30 மணியளவில் தூதுவர் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

kep-2 இக் கருத்திட்டத்தில் வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள்நல்லிணக்கத் தேவைகளை பேண்தகு புனர்நிர்மானம், மீள்கட்டுமான உதவிகள் மற்றும் அடிப்படைச் சேவைகளின் மேம்படுத்துகை மூலம் அடைவதற்கான நோக்காகக் கொண்டுள்ளது. இக்கருத்திட்டச் செயற்பாடுகள் சேதமடைந்த சிறிய சமூக உட்கட்டமைப்புக்களை புனரமைத்தல் மற்றும் மீள்கட்டுமானம்செய்தல், பாதைகள் களஞ்சிய வசதிகள், நீர்ப்பாசனக் கால்வாய்கள் ஆகியவற்றை மேம்படுத்தல் மற்றும் தலைமைத்துவம் சார்ந்த பயிற்சிகள் மூலம் பெண்களை வலுப்படுத்தல் மற்றும் சேமிப்பு, கடன் போன்றவற்றை அறிமுகம்செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

kep-2இந்நிகழ்வில் கலந்துகொண்டோர் முன்னிலையில் உரையாற்றிய மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் திரு. ஜனக சுகததாச அவர்கள் முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சமூக மட்டத்திலுள்ள கட்டுமானத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் ஜப்பான் அரசாங்கத்தின் உதவிகளை மெச்சினர். மேலும் அவர் இக்கருத்திட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்ட 224,432 குடும்பங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இலங்கையரினால் மேற்கொள்ளப்படுகின்ற பௌதிக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார வசதிகள் மேம்படுத்துதல் செயற்பாடுகளுக்கு குறைநிரப்பியாக அமையும் என்றார்.

 

Current Projects

வெளியீடுகள்.

 

வருடாந்த முன்னேற்ற அறிக்கை – 2012 ஆங்கிலம் பகுதி -1 

தரவிறக்கம் செய்வதற்கு இங்கு ‘கிளிக்’ செய்யவும்.

2வருடாந்த முன்னேற்ற அறிக்கை – 2012 ஆங்கிலம் பகுதி -2

 

 

தரவிறக்கம் செய்வதற்கு இங்கு ‘கிளிக்’ செய்யவும்./a>


   
வருடாந்த முன்னேற்ற அறிக்கை – 2012 ஆங்கிலம் பகுதி -3

 

தரவிறக்கம் செய்வதற்கு இங்கு ‘கிளிக்’ செய்யவும்.


வருடாந்த முன்னேற்ற அறிக்கை - 2012 சிங்களம் பகுதி -1

 தரவிறக்கம் செய்வதற்கு இங்கு ‘கிளிக்’ செய்யவும்.
வருடாந்த முன்னேற்ற அறிக்கை - 2012 சிங்களம் பகுதி -2

 

 


தரவிறக்கம் செய்வதற்கு இங்கு ‘கிளிக்’ செய்யவும்.<a>
 


வருடாந்த முன்னேற்ற அறிக்கை - 2012 சிங்களம் பகுதி -3

 


தரவிறக்கம் செய்வதற்கு இங்கு ‘கிளிக்’ செய்யவும். 

வருடாந்த முன்னேற்ற அறிக்கை – 2011 ஆங்கிலம்

  

வருடாந்த முன்னேற்ற அறிக்கை  - 2012 தமிழ்

 

 

வருடாந்த முன்னேற்ற அறிக்கை - 2012 சிங்களம்

 Resettlement News Letter November 2011


Open publication - Free publishing - More newsletter
PERFORMANCE AND PROGRESS REPORT -2010

Open publication - Free publishing - More progress

 


 • செயற்திறன் அறிக்கை -2009
 
Click here to download Performance Report Tamil Version
Version:Tamil
Click here to download Performance Report Sinhala Version
Version:Sinhala
 


 
  
 

 

செயற்பாடு – மீள்குடியேற்ற அதிகாரசபைச் சட்டம் இல. 09.2007 தரவிறக்கம் செய்வதற்கு

   

Messages

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் அவர்களின் செய்தி


மீள்குடியேற்ற அமைச்சின் முக்கிய நோக்கம், இலங்கையில் முப்பது வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டுப்போர் காரணமாக தங்கள் சொந்த இருப்பிடங்களை இழந்த இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இருப்பிடங்களில் கௌரவமான முறையில் மீள்குடியேற்றம் செய்தலை உறுதிப்படுத்துவதாகும். இவ்விடயம் தொடர்பில், கடைபிடிக்கப்படவேண்டிய நடைமுறை அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பான, "மகிந்த சிந்தனை" தொலை நோக்கில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

உள்ளக இடம்பெயர்வுக்குட்பட்டவர்களை மீள்குடியேற்றம் அல்லது மீள்குடியமர்வு செய்யும் நடவடிக்கையின்போது மீள்குடியேற்ற அமைச்சு இரண்டு விடயங்களில் அக்கறை செலுத்துகின்றது. முதலாவதாக உள்ளக இடம்பெயர்வுக்குட்பட்டவர்களுக்கான ஆரம்ப மனிதாபிமான உதவிகளை வழங்குதல். இவ்விடயமாக, அமைச்சினால் குடியிருப்பு நிவாரணம், சமைத்த உணவு, உலர் உணவுப்பொருட்கள் (ஆறு மாதங்களுக்கு அல்லது அதற்கு மேலாக), நீர் மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகள் அத்துடன் கல்வி, சுகநல வசதிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறான வசதிகள் உள்ளக இடம்பெயர்வுக்குட்பட்டு மீள்குடியேற்றப்பட்ட ஏறக்குறைய 300,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

இரண்டாவதாக மீள்குடியேற்றப்பட்ட சமூகத்தினரை ஏனைய சமூகத்தினருடன் மீண்டும் இணைந்துகொள்ளும் பொருட்டு ஏதுவான சூழலை பொருத்தமான வசதிகள், கண்காணிப்பு என்பவற்றினூடாக ஏற்படுத்திக்கொடுத்தலாகும். இவ்விடயமானது, மீள்குடியேற்றத்துக்குப் பின்னரான சமூக மற்றும் தனிநபர்களுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தியினையும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கா னவாழ்வாதார வசதிகளை மீள ஏற்படுத்திக்கொடுத்தல் ஆகும

அமைச்சானது, அடிப்படைத் தேவையான குடிநீர், துப்பரவேற்பாட்டு வசதிகள், குடியிருப்பு போன்ற அடிப்படைத் தேவைகளுடன், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள இளம் சமுதாயத்தினரின் முயற்சியாண்மை, தொழில் வசதிகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதில் அக்கறை செலுத்துகின்றது. மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும்

நடவடிக்கைகள் பூர்த்தியடையும் நிலை காரணமாக, இலங்கை அரசாங்கத்தின் கொள்கைக்கமைவாக, அமைச்சானது, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியா மற்றும் வேறு நாடுகளில் வதியும் இலங்கையர்களை மீளவும் தாயகம் திரும்புவதற்கான உகந்த சூழலை உருவாக்குவதில் அக்கறை செலுத்துகின்றது.

மேலும் இடம்பெயர்வுக்குட்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்களக் குடும்பங்களையும் விரைவில் அவர்களின் சொந்த இருப்பிடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த இணையத்தளத்தின் நோக்கம், சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இவ்வமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் அறியத்தருவதாகும். எனவே இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நன்மையடைவார்கள் என நம்புகின்றேன்.

ஜனக சுகததாச
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்

 

VisionMision

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2013 16:53

"மீள்குடியேற்றத்தின் பின்னர் சமூகத்திற்கும் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் பயனுறுதி வாய்ந்த முறையில் பங்களிப்புச் செய்யக்கூடிய திருப்திகரமான சமூகம்."

   

மேலதிகக் ஆக்கங்கள்...

பக்கம் 1 - மொத்தம் 2 இல்