மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு

இலங்கை

 

English (United Kingdom)SinhalaTamil

உள்நுழைய

இங்கே உள்நுழைவதன்மூலம் புதிய அபிவிருத்திச் செய்திகள் மற்றும் திட்டங்கள் பற்றி உங்களுக்கு அறியத்தருவோம்

வருடாந்த முன்னேற்ற அறிக்கைகள்

Current Projects

வெலிஓயா வீடமைப்பு அபிவிருத்தித்திட்டம்.

அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவர்களின் ஆலோசனைக்கிணங்க அப்பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட சமூகத்தினரின் தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக, 2012 யூலை 29ந் திகதி வெலிஓயா வீடமைப்புத் அபிவிருத்தித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதலாம் படிநிலையின் கீழ், ஹெலம்பவெவ, கல்யாணபுர-1, கல்யாணபுர-111, மொனராவெவ மற்றும் கஜபாபுர கிராமங்களில் 500 புதிய வீடுகள் அமைக்கப்பட்டன. இத்திட்டத்தின் இரண்டாம் படிநிலையின் கீழ் ஜனகபுர, கிறிஇப்பன்வெவ எத்தனவெட்டுனுவெவ, நிக்கவெவதெற்கு, நவ கஜபாபுர மற்றும் எஹெட்டுகஸ்வெவ கிராமங்களில் 357 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன

இத்திட்டமானது மீள்குடியேற்ற அமைச்சு, நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிர்மாணம், பொறியியல் சேவைகள், வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சு ஆகியவற்றின் கூட்டுமுயற்சியாவதுடன் இலங்கையின் கிராம அபிவிருத்தியில் புதிய அனுபவத்தினை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் அமைக்கப்படுவதுடன் உட்கட்டமைப்பு வசதிகளான வீதிகள், மின்சாரம், நீர்ப்பாசனம், போக்குவரத்து மற்றும் பாடசாலை போன்றவைகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. மேலும் மிகவும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் ‘மெஹெனியாராமய’ (பெண் துறவிகளின் ஆச்சிரமம்), சமய மற்றும் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக உட்கட்டமைப்புத் தேவைகளான முன்பள்ளிகள், சனசமூக நிலையங்கள், பொதுக்கிணறுகள், உள்ளக வீதிகள் போன்றனவும் கிராமமக்களின் நன்மைக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அனுராதபுரம் மாவட்ட செயலகம், முல்லைத்தீவு மாவட்ட செயலகம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார​சபை, இலங்கை மகாவலி அதிகாரசபை, வெலிஓயா பிரதேச செயலகம், இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினரின் உற்சாகமான ஒத்துழைப்புடன் இச் சவாலான முயற்சி நிறைவேற்றப்பட்டுள்ளது. கஜபாபுரக் கிராமத்தில் உள்ள 82 வீடுகளுக்கும் வர்ணம் பூசிய முழுச்செலவினையும், ஶ்ரீலங்கா ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால், அதனது சமூகக் கட்டுப்பாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்டு நிறைவேற்றப்பட்டது. “CAUSE WAY PAINTS” லங்கா நிறுவனத்தினால் வீடுகளை வர்ணம் பூசுவதற்கான வர்ணப்பூச்சு மை வழங்கப்பட்டமை வரவேற்கப்படுகின்றது.

அப்பிரதேசத்தில் மேற்படி வீட்டுத்திட்டம் மற்றும் அபிவிருத்திவேலை தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சினால் மட்டும் 276.0 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. “மகிந்த சிந்தனை” தொலை நோக்குத் திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டவாறு இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடமைப்புத் திட்டம் வழங்கப்படுகின்றமை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கை ஆகும்

வெலிஓயா நிலையான வீடமைப்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பிலான முழுச் செலவீன விபரம்.விடயம் செலவீனம் ரூபா (மில்லியனில்)
01 முதலாவது கட்டத்தின் கீழான 500 புதிய வீடுகள் அமைப்பு
160.00
02 புதிய ‘மெஹெனியராமய’ அமைப்பு
1.50
03 பிள்ளைகளுக்கான விளையாட்டு மைதானம் அமைப்பு
0.28
04 மூன்று விவசாயக் கிணறுகள் அமைப்பு
0.80
05 108 மலசலகூடங்கள் அமைப்பு
6.09
06 பொதுமண்டபம் அமைப்பு
0.77
07 இரண்டாவது கட்டத்தின் கீழ் 357 புதிய வீடுகள் அமைப்பு
107.00
 
மொத்தச் செலவீனம்
276.44