மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு

இலங்கை

 

English (United Kingdom)SinhalaTamil

உள்நுழைய

இங்கே உள்நுழைவதன்மூலம் புதிய அபிவிருத்திச் செய்திகள் மற்றும் திட்டங்கள் பற்றி உங்களுக்கு அறியத்தருவோம்

வருடாந்த முன்னேற்ற அறிக்கைகள்

Current Projects

கேப்பாப்பிலவு மீள்குடியமர்வுத் திட்டம்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தில் “மாதிரிக்கிராமம்”கௌரவ குணரத்ன வீரக்கோன், மீள்குடியேற்ற அமைச்சர் அவர்களினால், 2012 நவம்பர் 02ந் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா மெனிக்பாம் நிவாரணக்கிராமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 165 குடும்பங்கள், அவர்களின் சொந்த இடமான முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராமத்தில் பாதுகாப்பு படையினரின் தலைமையகம் அண்மித்திருந்த காரணத்தினால், மீள்குடியேற இயலவில்லை. இக் காரணத்தினால் மீள்குடியேற்ற அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டச்செயலாளர், பாதுகாப்புபடையினரின் முல்லைத்தீவு தலமையகம் ஆகியோரின் அனுசரனையுடன் கேப்பாப்பிலவு கிராமத்தின் அண்மையில் உள்ள “சீனியாமோட்டை” கிராமத்தில் புதிய மாதிரிக் கிராமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் மீள்குடியமர்வுத் திட்டத்தின் கீழ் 165 வீடுகள் இரு கட்டங்களாக அமைக்கப்படவுள்ளன. இவ் வீடுகளுடன் பொது வெட்டுக் கிணறுகள் 05, குழாய்கிணறுகள் 10, மலசல கூடங்கள் 165, சனசமூக நிலையம் 01, பாலர்முன் பாடசாலை 01, 10 கிலோ மீற்றர் நீளமான உள்ளக வீதிகள் ரூபா 111.5 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ளன. இவ் வீடுகள் மற்றும் ஏனைய விடயங்களை அமைப்பதில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படையினர் முன்னின்று உழைக்கின்றனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு கிராமத்தில் புதியமாதிரி கிராமத்தின் முதற்கட்டத்தினை கௌரவ குணரத்தன வீரக்கோன் மீள்குடியேற்ற அமைச்சர், கௌரவ விநாயக மூர்த்தி முரளிதரன் பிரதி மீள்குடியேற்ற அமைச்சரின் பிரசன்னத்துடன் 2013 மார்ச் 16ம் திகதி முற்பகல் 10.00 மணியளவில் ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில், இரண்டாம் கட்டத்தில் கட்டவேண்டிய 101 வீடுகளுக்கான அத்திவாரக் கற்களும் நாட்டப்பட்டன.

கேப்பாபிலவு வீடமைப்புத்திட்ட பயனாளிகளின் விபரம் – முல்லைத்தீவு மாவட்டம்

 முல்லைத்தீவு மாவட்டம்

இத்திட்டத்திற்கான 2013ம் வருட செயற்திட்டம்.

முல்லைத்தீவு மாவட்டம

கேப்பாபிலவு கிராமத்திற்கான செலவு


16.03.2013 வரையிலான மொத்தச் செலவினம்


இல விபரம் தொகை (ரூபா) செலுத்திய விபரம
1 பாலர் பாடசாலை ஆசிரியர் சம்பளம் 120,000.00 Paid
2 50 வீடுகள் அமைத்த செலவு 18,750,000.00 Completed
3 உள்ளக வீதிகள் 1,110,000.00 In Progress
4 நிலம் சீரமைத்தல் 939,000.00 Completed
5 குழாய்கிணறு மற்றும் வெட்டுக்கிணறு 7,594,760.00 Completed
6 காடு துப்பரவு செய்தல் 640,000.00 Completed
7 106 வீடுகள் அமைத்த செலவு 6,400,000.00 In Progress
  மொத்த் தொ​கை 35,553,760.00


புகைப்படத் தொகுப்பு .