மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு

இலங்கை

 

English (United Kingdom)SinhalaTamil

உள்நுழைய

இங்கே உள்நுழைவதன்மூலம் புதிய அபிவிருத்திச் செய்திகள் மற்றும் திட்டங்கள் பற்றி உங்களுக்கு அறியத்தருவோம்

வருடாந்த முன்னேற்ற அறிக்கைகள்

மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளுக்கான கருத்திட்டம்.

Current Projects


மீள்குடியேற்ற அமைச்சினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டம் திருப்திகரமான முறையில் செயற்படுத்தப்படுகின்றது. இக் கருத்திட்டமானது, மீள்குடியேற்ற அமைச்சர் எம்.எச். குணரத்ன வீரகோன் அவர்களினால், கிரான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 2013 மார்ச் 24ந் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மீள்குடியேற்ற அமைச்சு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக 150.0 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம் 30 வருடங்களாக நீடித்த முரண்பாட்டு நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களின் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதாகும். 2012ம் ஆண்டில் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிற்க்கிணங்க வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், நாடளாவிய ரீதியாக ஒப்பிடும்போது, குறைந்தளவு மலசலகூட வசதிகளே உள்ளதாக அறியப்படுகின்றது. இந்நிலையினைக் கருத்திற்கொண்டு, அமைச்சினால் இவ்விரு மாவட்டங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் முறையே 28.56 மில்லியன் ரூபா மற்றும் 20.0 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வருட இருதிக்குள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள திட்டத்தின் முதலாம் படிநிலையின் கீழ், சுகாதார வசதிகள் தொடர்பில் 1663 மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள் பயனடையவுள்ளன. மேலும் இத்திட்டத்தின் கீழ் 81 வெட்டுக்கிணறுகள் அமைக்கப்படுகிt.

மீள்குடியேற்ற அமைச்சு வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் செயலாளர்களுடன் இணைந்து, அங்கு தேவையாகவுள்ள குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பான பூரண விபரங்களைக் கண்டறிந்துள்ளது.

சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2015ம் ஆண்டிலும், மீள்குடியேற்றத்துக்குப் பின்னரான தேவைப்படும் குடும்பங்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார தேவைகள் தொடர்ந்து வழங்குவது தொடர்பில் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.